படம் – ஆயிரத்தில் ஒருவன்
எழுத்து & இயக்கம் – செல்வராகவன்
எழுத்து & இயக்கம் – செல்வராகவன்
முதல் பாதியில் செல்வராகவன் எல்லோரையும் நிமிர்ந்து உட்கார்ந்து சிரிக்க வைக்கிறார். பின் பாதியில் பாயைப் பிறாண்ட வைக்கிறார்.
எல்லா அட்வென்ச்சர் படம் போலவே கதை எளிமையானதுதான். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மறைந்து போன சோழர்களைத் தேடி போகின்றனர் ஒரு குழு. அதில் முக்கியமானவர்கள் ரீமா சென், கார்த்தி, ஆண்ட்ரியா. அதை அவர்கள் அடைந்த பின் வரும் திடீர்த் திருப்பங்களும் அதனால் வரும் அக்கப்போர்களும் தான் கதை.
முதலில் படத்தின் நிறைகளைப் பாராட்டி விடுவோம். தமிழில் இது போல ஒரு “GENRE”ல் படம் வந்ததே இல்லை. அதற்காக செல்வாவை தாராளமாக கை வலிக்கும் வரை குலுக்கலாம். படத்தின் பிரம்மாண்டத்திற்காக ஒவ்வொரு நுணுக்கிலும் மெனக்கெட்டிருக்கிறார். அது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. காட்டில் நெளியும் பாம்புகளாகட்டும், அடர்ந்த காடுகளின் பசுமையிலும், தைரியமாக எடுக்கப்பட்ட கதைக்கும், தேடிப் பிடித்த லொகேஷன்களிலும், மிரட்டும் மர்மதிலும், அவரின் உழைப்பு தெரிகிறது. படத்தில் கவனிக்கப் பட வேண்டியவர்கள் மூன்று பேர். கார்த்தி, ரீமா சென், பார்த்திபன். எல்லோரும் கொடுக்கப்பட்டதை கம்பீரமாக செய்திருக்கின்றனர். கார்த்தியின் ஒவ்வொரு அலப்பரைக்கும் கைதட்டல் உண்டு. பார்த்திபன் மிடுக்காக ஒரு மன்னனுக்கே உரிய கர்வத்துடன் வருகிறார். (அனால் ஏன் அவ்வளவு புரியாத மொழி பேசுகிறார்?) ரீமா சென் கண்களில் காமத்துடனும், வெறியுடனும், இடைவேளைக்கு பிறகு புதிய அவதாரமெடுத்து பயமுறுத்துகிறார். (உச்சரிப்பில் இன்னும் நேர்த்தி தேவை) கலை இயக்கம் அபாரம். சோழர் குகைகளையும் சிலைகளையும் மிகுந்த உழைப்போடு செய்திருக்கிறார். பாட்டில் சூடு பிடிக்கும் இசை, பின்னணியில் சற்றே சறுக்குகிறது. கேமரா இயற்கையையும் திகிலையும் அள்ளி வந்திருகிறது.
முதல் பாதி இரண்டு குதிரைகளை கட்டிக் கொண்டு “ஜிவ்” என்று பறக்கிறது. ஆங்காங்கே பல ஆங்கிலப் படங்களை நினைவு படுத்தினாலும் படத்தின் விறுவிறுப்பில் அது மறைந்து போகின்றது. ஒவ்வொரு பொறியையும் அவர்கள் கடக்கும் போது, நாமும் அவர்கள் கூடவே பயணிக்கிறோம். முதல் ஒன்றரை மணி நேரம் நம்மை கட்டிப் போடுகிறார் இயக்குனர்.
இரண்டாவது பாதியில் யாரையாவது கூப்பிட்டு படத்தை தள்ள வேண்டியிருக்கிறது. நல்ல கதையை சுவாரஸ்யமாக சொல்லும் திறனில் கோட்டை விடுகிறார் செல்வா. படத்தின் பெரிய குறை பல பேருக்கு இரண்டாம் பாதிப் படம் புரியாததுதான். பின்பாதி யாருக்கும் புரிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல் பட்டிருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு உபயோகப்பட்டது பல. முக்கியமானது, 1. மொழி, 2. திரைக்கதை. சோழர்கள் பேசும் மொழி தமிழ்தான். இருப்பினும், அதற்கே ஒரு கோனார் உரை தேவையாய் இருக்கிறது. ஓரளவு தமிழ் தெரிந்தவர்களையும் படுத்தி விடுகிறது. யதார்த்தம் தேவைதான். அதற்காக இப்படியா? இயல்பான தமிழை கொஞ்சம் கலந்திருந்தால், சற்றே தெளிவாகி இருக்கும். திரைக்கதை என்ற ஒரு வஸ்து பிற்பாதியில் இருக்கிறதா என்று படத்தில் வரும் ராணுவத்தைதான் தேட சொல்ல வேண்டும். அப்படியே இருந்தாலும் அது யாருக்கும் புரியாமல் போனதில்தான் பெரிய சோகம். படத்தில் பிற்பாதி முழுக்க வரும் எல்லா முக்கிய நிகழ்வுகளும் மூடநம்பிக்கைகள் மூலமாக சித்தரிக்கப் பட்டிருப்பது ஒரு பெரிய பின்னடைவு. “FANTASY”யை ஊறுகாய் போல அல்லாமல், அதுவே கதையை நகர்த்தி செல்வது, விட்டலாச்சார்யா படம் பார்த்த உணர்வைத் தருகிறது. ரீமா சென் மேல் “ப்ளூ” கலரில் ஏதோ சுற்றி சுற்றி பயம் காட்ட, அவருக்கு சன்னதம் வந்து, முதுகை பிரித்து க்ராபிக்ஸ்ல் சோழர்கள் புலி காட்டுகிறார். பீரைக் கொடு, சிக்கனைக் கொடுன்னு சோழர்களை சொரண்டிக் கொண்டிருந்த கார்த்தி, ராஜ குரு வந்து விரலில் புள்ளி புள்ளியாய் மின்னலை அவர் மீது பாய்ச்சி விட்டு மண்டையை போட்டவுடன், போரில் பறந்து பறந்து வாள் சண்டை போட்டு பலரை குத்துகிறார் (நம்மையும் சேர்த்துத்தான்). ஏழு ஆபத்துகளை பாதி படம் வரை கஷ்டப்பட்டு கடக்கிறார்கள். ஆனால், கிளைமாக்ஸ்ல் ஐந்து நிமிடத்தில் ராணுவம் வந்து முகாம் அமைத்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு சண்டை போடுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் தேவனுக்கே தெலுசு! க்ராபிக்ஸ் அங்கங்கே “அட” போடா வைக்கிறது. பல இடங்களில் “ஆஆவ்.....”. கடலும், அருவியும், புழுதியும், சண்டையும் மாறி மாறி வருகிறது.
கடைசியாக அந்த சிலையை காட்டுகிறார்கள், அடடா! என்ன ஒரு மொக்கையான சிலை! நமக்கு, இந்த சிலைக்காகத்தனா இவ்வளவு தூரம் வந்தார்கள் என்று தோன்றுகிறது. எதாவது ஒரு அழகான சிலையையாவது வைக்கக் கூடாதா? வன்முறையும் ரத்தமும் போட்டி போட்டுக் கொண்டு படத்தை ஆட்சி செய்கிறது. பொழுது போகவில்லை என்றால் யாரையாவது கொல்கிறார்கள். இல்லை நரபலி கொடுக்கிறார்கள். இன்னும் ரத்தம் வேண்டும் என்று கேட்பவர்களுக்காகவே ஒரு சுமாரான கிராபிக்ஸ்ல் “க்ளாடியேட்டர்” சண்டை வைத்திருக்கிறார்கள். போரில் சோழர்கள் வெல்வதற்கு ஒரு தாத்தா தன்னை தானே பலி கொடுத்துக் கொள்கிறார். ரத்தம் நம் முகத்தில் தெறிக்கிறது. “சென்சார்” நன்றாக தூங்கிவிட்டார்கள் அல்லது தூங்க வைக்கப் பட்டிருக்கிறார்கள். “AA” கொடுக்க வேண்டும் படத்திற்கு.
படத்தில் நடக்கும் பல விஷயங்களுக்கு காரணம் நாமே யூகிக்க வேண்டியிருக்கிறது அல்லது விக்கிபீடியா படித்து தெரிந்து கொள்ள வேண்டும்! (படத்தில் சொல்லுவார்களோ என்னவோ, யாருக்கு புரிகிறது அவர்கள் பேசுவது?) உதாரணத்திற்கு ரீமா சென், பார்த்திபனை மயக்கி புணரத் துடிப்பது எதற்கு? (கலாசார நம்பிக்கை? என்னே தமிழ் கலாசாரம்!) கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா ஆகியோருக்கு திடீர் என்று பைத்தியம் பிடிப்பது எதனால்? ரீமா எதற்கு திடீரென்று கார்த்தியை சுடுகிறார்? (ஒரு வேளை அவர் துப்பாக்கியை வைத்துக் கொண்டே ஆடியதால் கை தவறி குண்டு வெடித்ததோ?:-)) அந்த பயங்கரமான “ராஜ குரு” முன் எல்லோரும் ஏன் “strip tease” செய்கிறார்கள்? இப்படி பல ‘ஏன்’ கேள்விகள் இரண்டாம் பாதி எங்கும் விரவிக் கிடக்கின்றது. எதோ புரிவது போன்ற பாவனை மட்டுமே செய்ய முடிகிறது நம்மால்! சிறிது யோசித்தால் புரியும். ஆனால் யோசிக்கவா படத்திற்கு வருகிறோம்? சிறிது படித்தவர்களுக்கே இவ்வளவு குழப்பம் என்றால், “சி” சென்டர் மக்கள் பாடு திண்டாட்டம்தான். இதைப் பார்த்துவிட்டு ஒன்று நினைக்கத் தோன்றுகிறது.செல்வா எல்லாவற்றிற்கும் காரணங்களை நிறைய எடுத்து, படத்தை ஓட்டிப் பார்க்கும் போது, ஆறு மணி நேரத்தைத் தாண்டி அதிர்ச்சி கொடுத்திருக்கும். அதனால், பல ரீல்களை வெட்டி நமக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். (தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று சொல்லத் தேவை இல்லை!)

எந்த ஒரு படத்திற்கும் ஒரு தாரக மந்திரம் உண்டு “நிறைய எழுதலாம்! ஆனால் நிறைய எடுக்கக் கூடாது!”
இன்னொன்று, சோழர்களை பற்றிக் காட்டி இருப்பது. படத்தின் ஆரம்பத்தில், “சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இந்த படத்திற்கும் சம்பந்தம் இல்லை” என்று சொல்கிறார்கள். ஆனால் படத்தில் வருவது எல்லாம் சோழர்களையே அடையளப்படுத்துகிறது. (புலிச் சின்னம், தஞ்சாவூர்) படம் நன்றாக இருந்திருந்தால் யாரும் இதை கண்டு கொண்டிருக்க மாட்டார்கள். படம் இப்பொழுது ஊத்திக் கொண்டால், அதற்கு காரணம் சோழர்களை அவமானப்படுதியதுதான் என்று ஒரு கும்பல் கெளம்பும். எப்படி இருந்தாலும் ஒரு தமிழ் ராஜா தன் மக்களையே நரபலி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுமார் எட்டு முதல் பத்தாம் நூற்றாண்டுகளிலேயே நரபலி கொடுப்பது என்பது தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது 21-ம் நூற்றாண்டில் சரடு விடுகிறார்கள். என்னதான் அவன் சோழன் இல்லை என்று டைட்டில் கார்டு போட்டாலும், அந்த பெயர் நம்மை குத்துகிறது. பல அரிய கருவூலங்களை நமக்குத் தந்த சோழர்களை, நம்மை விட உயர்ந்த பண்பாடுள்ள ஒரு சமூகத்தில் வாழ்ந்திருந்த மக்களை, ஒரு நர மாமிசம் சாப்பிடுபவர்களாக, தன் மக்களையே கொல்லும் அரசனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கடைசியில் வெளியில் வரும் போது நமக்கு படத்துடைய பிரமாண்டத்தின் மலைப்பும் அதை மறக்க வைக்கும் தலைவலியும் தான் மிஞ்சுகிறது. படம் முடியும் பொழுது இதனுடைய தொடர்ச்சி வெளிவரும் என்ற எச்சரிக்கை நமக்கு காய்ச்சலையும் சேர்த்து வரவழைக்கிறது!

selva kastapattu mundru varudagalaga edutha thirai padathai mundru mani nerathil avan kalai nandraga varivitayaee!!
ReplyDeleteArumaiyana matrum velipadaiyana thirai vimarsanathuku enathu paratugal....
Balaji
என்ன பண்றது? மூணு வருஷம் எடுத்துட்டு நம்மள மூணு மணி நேரம் டார்ச்சர் பண்றாங்களே...வாழ்த்துகளுக்கு நன்றி..:-)
ReplyDeleteAnanda vikatanla vimarsanam padichathu pola irunthuthu...good writing...
ReplyDeletehey u the paaa...kazhudu meikara payanakku evalavu arivaaa?????...itha apadeye thanjavur kazh vettula suthukki pakkathalaye ukkanthukonga...pinnala vara santhithagal itha padichu theleva nadanthukuvanga......
ReplyDeleteu the kainadungis....nandrigal pala....
ReplyDeletedai eppadi thaan nattukula kulupatha unndu pandaranga.....nee oru mattera elluditta "அதற்கு காரணம் சோழர்களை அவமானப்படுதியதுதான் என்று ஒரு கும்பல் கெளம்பும்" enni enna nadakumo theriyala....ramadas parthar enna avallou thaan
ReplyDeleteபடம் பார்க்கும் ரசிகனின் மன நிலையை சரியா காண்பிசிருக்கீங்க வாழ்த்துக்கள்
ReplyDeletemouli, mohankumar,
ReplyDeletemikka nandri.