(எனக்கு இசையைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு கடைநிலை இசை ரசிகனின் பார்வையில் இருந்தே இதை எழுதுகிறேன். என் ரசனைக்கு கொஞ்சம் முரண் இருக்கலாம்)
புதிய மனிதா - SPB, Rahman, Katheeja Rahman - வைரமுத்து
ஒரு ரோபோ உருவாக்கத்தின் கடைசி கட்டப் பணிகளின் போது இப்பாடல் ஆரம்பிக்கும் போல உள்ளது. மெதுவாகக் குறைந்த இசையோடு ரஹ்மானின் சின்தசைஸ் குரலில் அறிமுகமாகிறது பாடல். கதீஜாவின் குரல் சில நொடிகளுக்கு பிறகு ஆரம்பித்து கவர்கிறது. மேலும் நம் பொறுமையை சோதிக்காமல் எஸ்பிபி வந்து பாடலைத் தடதடக்க வைக்கிறார். அவரின் குரல் உண்மையிலேய அவருக்கு இறைவன் கொடுத்த வரம். சில வரிகள் பாடினாலும் வெளுத்து வாங்குகிறார் எஸ்பிபி. வைரமுத்து, "இப்படிப்பட்ட அறிவியல் பாடல்கள் எழுதுவது இதுவே முதல் முறை" என்று கூறி இருந்தார். உண்மையே. இந்தப் படத்தில் அவர் எழுதியிருக்கும் எல்லாப் பாடல்களுக்கும் நிறைய உழைத்திருக்கிறார். தலைவர் சுஜாதா இருந்திருந்தால் இன்னும் நிறைய டிப்ஸ் கொடுத்திருப்பார். இந்தப் பாடலில் "தந்தை மொழி, கர்த்தா" என்கிற பதங்கள் கவர்கிறது. ஒரு ஓபனிங் பாடலுக்கு இருக்கக் கூடிய அந்த ஒரு பஞ்ச் குறைகிறது. இருப்பினும் வசீகரமான முதல் பாடல்.
பூம் பூம் ரோபோ - Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah - கார்க்கி
வழக்கமான ராப்பில் அதிர்ந்து ஆரம்பிக்கும் பாடல். பழக்கமான "ஒரே மெட்டு" யோகி B யின் வார்த்தைகளில் கொஞ்சம் கம்பீரம் இழந்து, நடுவில் தடம் மாறி ஆங்காங்கே கலக்குகிறது. நடுவில் வரும் "சுட்டி சுட்டி ரோபோ"வில் ஏற்கனவே கேட்ட சாயல். ஷங்கர் காட்சிகளில் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
கிளிமஞ்சாரோ - Javed Ali, Chinmayi - பா. விஜய்
முதல் "PICK OF THE ALBUM". பழங்குடியினரின் மெட்டை அடிப்படையாக வைத்து இசை அமைத்திருக்கிறார் புயல். இருப்பினும் புதிய கள்ளாக இனிக்கிறது. இதுவே படத்தில் கடைசி டூயட் போல இருக்கிறது. கேட்டவுடன் மனதில் ஒட்டிக் கொள்கிறது பாடல். சில இடங்களில் எங்கோ கேட்ட பாடலை நினைவு படுத்தினாலும் இசையும் வார்த்தைகளும் அதை மறக்கச் செய்கின்றன. "அப்பப்போ...பின்னிகோடி" என்ற இடம் வரும்போதெல்லாம், பாடல் துள்ளல் நடை போடுகிறது. "ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா?" என்று வார்த்தைகளில் வலை வீசுகிறார் பா.விஜய். சின்மயியின் குழைவுக்கு முன் ஜாவேத் அலியின் குரல் சிறிது பின் தங்கியே ஒலிக்கிறது. ஜாவேத் அலிக்கு கொஞ்சம் "ழகர" ப் பயிற்சி கொடுத்திருக்கலாம் ரஹ்மான். பல இடங்களில் உச்சரிப்பில் தள்ளடுகிறார். சீக்கிரம் பல கவுண்ட் டவுனில் முதல் இடம் பெறப் போகும் பாடல்.
சிட்டி டான்ஸ் - Pradeep Vijay, Pravin Mani, Yogi B
படத்தின் கிட்டத்தட்ட தீம் பாடல் போல. நடுவில் பரதநாட்டிய ஸ்வரங்கள் வருகின்றன. சிட்டி ரோபோ எல்லா வகை நடனமும் ஆடுகிறது போல இருக்கிறது. முழுக்க ஸ்வரங்களாக இல்லாமல் அதை உடனே தடம் மாற்றி தீம் பீட் கொடுத்து மனதை அள்ளுகிறார். பார்க்கப்பட வேண்டிய பாடல்.
அரிமா அரிமா - Hariharan, Sadhana Sargam - வைரமுத்து
இரண்டாவது "PICK OF THE ALBUM" இது. ஒரு ஓபனிங் பாடலுக்கு இருக்க வேண்டிய பஞ்ச் இந்தப் பாடலில் இருக்கிறது. மகாராஜாவுக்குக் கட்டியம் கூறி வரவேற்பது போலத் தொடங்கும் பாடல், டூயட்டாகவும் மிளிர்வது ஆச்சர்யம். ட்ரம்ஸுடன் கோரஸ் "இவன் பெயரை..." என ஆரம்பிக்கும் போது., பாடலின் மாஸ் உங்களுக்குப் புரியும். இயந்திரம் காதல் செய்வது போல இருப்பதாலோ என்னவோ ஹரிஹரன் கொஞ்சம் கடுமையாகவே மிரட்டி இருக்கிறார். "அஃறிணையின் அரசன், காமுற்ற கணினி, சிலிகான் சிங்கம்" போன்ற புதிய வார்த்தைகள் வைரமுத்துவிற்கு "அட" போட வைக்கின்றன. Watch out for this song!
இரும்பிலே ஒரு இதயம் - A R Rahman, Kash 'N' Krissy - கார்க்கி
ராப்பில் ஜப்பானிய வார்த்தைகளுடன் (Arigatho Gozaimas - நன்றி என்று அர்த்தம்!) ஆரம்பிக்கும் பாடல் எடுத்தவுடனேயே டாப் கியரில் பறக்கிறது. பாடலின் டெம்போ எங்கும் குறைவது இல்லை. நடுவில் வரும் ஆங்கில ராப்..வழக்கமான ஒன்றே. சிறிது நேரமே வருவதால் தப்பிக்கிறது. பாடலின் உயிரோட்டம் ரஹ்மானின் குரலில் இருக்கிறது. ஷங்கர் மீதியை காட்சிகளில் நிரப்புவார் என்று எதிர்பார்கிறேன்.
காதல் அணுக்கள் - Vijay Prakash, Shreya Ghoshal - வைரமுத்து
மூன்றாவது "PICK OF THE ALBUM". இந்தப் பாடல் சில முறை கேட்ட பின்பே பிடிக்கும். "Lukka Chuppi" போல ஆரம்பிப்பதாகத் தோன்றும் போதே...வேறு திசையில் இட்டுச் செல்கிறார் ரஹ்மான். விஜய் பிரகாஷ் என்பவர் ஆண் குரல். ஒரு அலட்சியம் கலந்த வசீகரம் இருக்கிறது இவர் குரலில். அதுவும் "oh..baby" பிட் வரும் போது இந்தப் பாடல் முழுமைத் தன்மையை அடைகிறது. என்றும் மெலடி பாடல்களே மனதிலும் காலத்திலும் நிற்கும். இந்தப் பாடலும் மக்கள் மனதில் என்றும் நிற்கும்.
எங்கேயாவது சில இடங்களில் கொஞ்சம் நெருடினாலும், முழுமையாகப் பார்க்கும் போது வெற்றிக் கொ(கோ)டியை எட்டி விட்டார்கள். "ANOTHER FEATHER IN PUYAL'S CAP!"

ungal vimarsanthi neengal oru ரஹ்மான் nin visiri enru oru sirya sayal therigirathe..
ReplyDeleteஇரும்பிலே ஒரு இதயம் padal konjam silirkavaikirathu